சரவணன் முதல் சூர்யா வரை --1
சூர்யாவின் இன்றைய அடையாளங்கள்.. சிக்ஸ் பேக்ச் பாடி , துறுதுறு இளைஞர், என்ன கேரக்டர் குடுத்தாலும் செய்வாம்பா...வசீகர சிரிப்பு ... டான்ஸ் கூட முன்னேற்றம்.. ஃபைட்டெல்லாம் கூட அட்டகாசம்... ஸ்கிரீன்ல மூஞ்சிய காமிச்சமாதிரியே அழுவுறாம்பா... இன்னும் சில வருஷத்துல கமலோட இடம் இவருக்குதாம்பா...
ஆனால்...
சூர்யா.. சரவணனாக எக்ஸ்போர்ட்டில் வேலை செய்து கொண்டிடுருந்த போது... அவரின் அடையாளங்கள்... எட்டு முன் பற்களில் கிளிப் போட்டுக்கொண்டு இருந்ததால் தைரியமாக சிரிக்கக் கூட முடியாது (வசீகர சிரிப்பு..??) .. எந்த வேல குடுத்தாலும் ஊத்திக்குதேன்னு ஒரு எண்ணம் ... துவண்டு ஒடுங்கிய தோள்களோடு ஊட்டச்சத்து கிடைக்காமல்வளர்ந்த குழந்தை போல உடல்வாகு (சிக்ஸ் பேக் ..??)
எப்படி இருந்த சூர்யா இப்படி ஆகியது எப்படி ???????? அதற்கு காரணம் என்ன ??
அவமானங்கள்.. வலிகள்.. காயங்கள்... அப்படி நேர்ந்த ஒரு அவமானம்தான் இன்று நாம் பார்க்கப் போவது ...
நேருக்கு நேர் டூயட் ஷூட்டிங்கிற்காக .... கொல்கத்தா பயணம்.. ‘எங்கெங்கே’ பாடல் .. டான்ஸ் என்றாலே வேப்பங்காய்....நண்பர்கள் முன்னால் கூட ஆடி இராத சூர்யாவை ஆட சொன்னார்கள்.. அதுவும் சிம்ரன் மாதிரி ஒரு பெண் முன்னால்.. சிம்ரனோ “நிறுத்து”ன்னு சொன்னாலும் ஆடிட்டே இருந்தாங்க.. (அவங்களுக்கு தமிழ் தெரியாதுப்பா.. )
ஒரு வழியாக ஓடி ஓடி ஷூட்டிங்கை முடித்தார்கள்.. பாதி பாடல் முடித்தாகி விட்டது...
அன்று இரவு ஏழு மணி வாக்கில்... கல்கத்தாபிரியாணி என்றொரு அய்ட்டம் (சாப்புடுறதுதாங்க,..) சூர்யாவோ வெளுத்துக்கட்டிக் கொண்டிருந்தாராம்.. (பாவம் .. ஆ(ஓ)டி கலைச்சுறுப்பாருல்ல..) அங்க வந்த டைரக்டர் வஸந்திடம்.. நேரம் தெரியாமல்.. “ஸார்.. கல்கத்த பிரியாணி சூப்பர்..” என்னு சொல்ல.. “இதை மட்டும் வக்கனையா பேசு .. பர்ஃபாமென்ஸுல கோட்ட விட்டுறு “ னு எல்லார் முன்னாடியும் கத்திட்டார்...
சூர்யாவுகோ.. அங்க இருப்பதா ?? இல்லாட்டி பறந்து போவதா எனத்தெரியவில்லை... அன்னைக்கி நைட் ரூம்ல அழுதாராம்... ”ஏண்டா நடிக்க வந்தோம்னு” நெனச்சு...பின் அவர் நடனப் பயிற்சி எடுத்து ... ஹ்ம்ம்ம்ம்.. கலக்குறார்.. (ஏத்தி ஏத்தி பாடல் இன்றைய தேதியில் அவரின் சிறந்த நடனம் என்று சொல்லலாம்... )
2
சூர்யாவை புடிக்கும்ன்னு ஒருத்தர் சொன்னார்ன... கண்டிப்பா அவருடைய படங்களுக்காகவும்.. தன்னம்பிக்கைகாகவும்னு மட்டும் புடிக்கும்னு சொல்லமுடியாது..
தனி மனித ஒழுக்கமும் ஒரு முக்கியமான காரணம்...
இத ஒரு பாய்ண்ட்டா நான் இங்க சொல்லும் போது ... கண்டிப்பா சிவகுமார பத்தி சொல்லாம இருக்க முடியாது.. “கலையுலக மார்க்கண்டேயர்” .. ஒழுக்கம்னா
என்னன்னு ஒழுக்கமே வந்து பாத்துட்டு போகும்.. அவ்ளோ நல்லவர்... அவரைப் பற்றி சூர்யா சொல்லும் போது..
“என் அப்பாவிடம் நேரந்தவராமை என்பது எனக்குப் பிடிச்ச ஒரு நல்ல பழக்கம்.. ‘சிந்து பைரவி’ பட ஷூட்டிங் அப்போ.. ‘உன்னவிட ஒரு நாளாவது சீக்கிரம்
வந்து காட்டுறேன் பாருன்னு சவால் விட்டு .. பின் ‘உன்கூட இந்த விஷயத்துல மோத முடியாதுப்பான்னு’ விலகிக் கொண்டாராம் பாலச்சந்தர் .. அதே மாதிரி
சினிமாக்காரன் வீடுன்னா.. 555 சிகரெட்.. ஆடம்பர செலவுகள்ன்னு .. இருக்கும்றத மாத்தி .. எங்க வீட்டுல செகரெட் ஆஷ்ட்ரே கூட இருக்காது.. படிக்கிற காலத்துல
5 ஸ்டார் ஓட்டல் கூட போனதில்ல... கல்லூரி காலம் வரை அப்பா அம்மா ரூம்லேயே தூங்குனோம்... மிச்ச எல்லா சினிமாகாரங்க வீட்டுல கெடக்காத விட எங்க
வீட்டுல பாசம் கொஞ்சம் ஜாஸ்தியாவே கெடச்சுதுண்ணு அடிச்சு சொல்லுவேன் ...”
செரி இப்பிடி இருக்குற சிவக்குமார்.. சூர்யாவ ஏன் குடிக்க சொன்னார்.. ஒரு முறை பிஸினஸ் கிளாஸ் பயணம்.. மலேசியாவிற்க்கு.. கிரிஸ்டல் கிளியர் மினரல்
வாட்டர எல்லாருக்கும் குடுத்துட்டுப் போனாங்க...
“பச்ச தண்ணி தர்றதுல ஏன் இவ்ளோ கஞ்சத்தனம்?”ன்னு சூர்யாம் கேட்க..
சிவகுமாரோ.. விமான
பணிப்பெண்ணை கூப்பிட்டு அந்த வாட்டரை வாங்கிக் குடுத்து “குடி” என்றாராம்.. அதை ஒரு வாய் குடித்டதும் .. சுரீர்ன்னு நாக்குலபட்டு.. குடலே வெளில வர்ற
மாதிரி ஒரு உணர்வு .. “இது என்னாதுபா ??”
“இதுதாம்பா வோட்கா .. மனுஷன் சந்தோஷம்னாலும் துக்கம்னாலும் இதுலதாம்பா விழுறான்.” அப்படீன்னு சொன்னாராம்...
குடியோட நன்மை தீமைகள விளக்கி சொல்லி இருந்தா ஒருவேள அவர் மாறிப் போயிருக்கலாம்... ஆனா.. அந்த சம்பவம் தந்த அருவெறுப்பு.. இன்னைக்கும்
அவருக்குள்ள... ( இது எல்லாருக்கும் ஒர்க் அவுட் ஆகுமா ??? )
3
ஒளிமயமான ஜோடி’ என்று பத்திரிக்கை வதந்தியுலகில் பெயரெடுத்த ஜோடி.. சில வருடங்களுக்கு முன்னால் இந்தப் பெயரில்லாமல் எந்தக் கிசுகிசுவும் வராது...
’காக்க காக்க’ விமர்சனத்தில் ஆனந்த விகடன் “made for each other" அப்டீன்னு சொன்ன ஜோடி.. செரி.. எப்டி சேந்தாங்க??
சினிமாவை வெறுத்த சரவணன் நடிகனானதும்.. பின் அந்த மாய உலகத்திலேயே அவனுக்கு ஜோடி கிடைத்ததும் ஆச்சிர்யமே..
‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படம் அவர்கள் முதன்முதலில் சேர்ந்து நடித்த படம்.. அதில் நடிக்கும் போதும் ‘என்னடா நமக்கு ஆட வரமாட்டேங்குது.. நடிக்க வரமாட்டேங்குது’ன்னு சூர்யா feel பண்ணிட்டு இருந்தா .. அந்தப் பக்கம் ஜோ பொண்ணு நிறுத்து நிறுத்துன்னு சொல்லியும் நடிச்சுட்டு இருந்துருக்கு....
ஒளிமயமான ஜோடியின் வார்த்தைகள் ஒரு hi,bye யுடன் முடிந்த காலம்...
படம் நல்லா இருந்தாலும் சொதப்பலான திரைக்கதை மேலும் ‘மின்சாரக் கண்ணா’ போன்ற படங்கள் ஒரே கதையுடன் வெளிவந்ததால் செரியாக ஓடவில்லை... ‘உயிரிலே கலந்தது’ என்னும் படத்தில் அடுத்து நடித்தாலும் பெரிய முன்னேற்றம் இல்லை..
அடுத்த காலகட்டம் சூர்யாவின் வாய்ஸிலேயே..... “சினிமாவ விட்டுட்டு போறதா இல்லாட்டி இன்னும் இருக்குறதான்னு தெரியாம இருந்த காலம்... Y.m.c.a கிரவுண்டில் ஒருநாள் மண்ணும் வியர்வையுமாக நிற்க... அங்கே பக்கத்தில் ஜோதிகாவுடைய ஷூட்டிங்.. ‘நம்ம கூட நடிச்ச பொண்ணு’ குஷி,தெனாலி’ன்னு எங்கயோ போயிடுச்சு.. நாம என்னன்னா.. இப்போதான் பல்டி அடிக்கவே கத்துக்குறோம்னு ஒரு எண்ணம்..’
சார் ஜோதிகா மேடம் உங்கள கூப்புடுறாங்கன்னு ஒருத்தர் வந்து சொல்ல.. பாக்க முடியாதுன்னு சொல்லி அனுபிச்சிட்டேன்.. திரும்பவும் அவர் வந்து கூப்பிட .. போய் பார்த்தேன்
ஜோ :- என்ன சூர்யா என்னை ஞாபகம் இருக்கா??
சூர்:- (மௌனம்..)
ஜோ:- என் படங்கள் பாப்பீங்களா??
சூர்:-ஓ.. பாப்பேங்க..
ஜோ:-அட்லீஸ்ட் ஒரு ஃபோன் பண்ணி பாராட்ட மாட்டீங்களா??
சூர்:- உங்க ஃபோன் நெம்பர் எங்கிட்ட இல்லீங்க...
ஜோ:-ரெண்டு படத்துல சேர்ந்து நடிச்சுட்டோம்.. ஃபோன் நெம்பர் இல்லன்னு சொல்றீங்க???
ஃபோன் நெம்பர் பரிமாறப்பட்டது... அதுக்குப் பிறகு கொஞ்சமாவது உருப்படியா ஏதாவது பண்ணனும்னு நெனச்சு ரொம்ப பொறுமையா ஒத்துக்கிட்ட படம் “friends" அந்தப் படத்தோட previewக்கு ஜோவ கூப்பிட்டு இருந்தார்.. வந்தவங்க.. கிளைமாக்ஸ் பாக்காம கிளம்பி போய்டாங்க.. அந்தக் கிளைமாக்ஸ்தான் இருந்த கொஞ்சநஞ்ச தெறமய காமிச்சதா நெனச்சுட்டு இருந்தாரு சூர்யா... ஆனா அவங்க பாக்காம போய்டாங்க... அதற்கு பின் ஃபோனில்...
ஜோ:- அவசரமான வேல அதனால போய்ட்டேன் சூர்யா.. நல்லா நடிச்சுருக்கீங்க..
சூ:- படத்த பாக்காமலேயே கெடக்குற பாராட்டு எனக்கு வேணாம்...
ஜோ:- அடடா, இன்னொ முற முழுசா பாத்துட்றேன்
கோபத்தில் அவங்களோட பேசுறதையே நிறுத்திட்டார் சூர்யா.. அப்புறம் எப்பிடி கல்யாணாம் வரை... அட... இன்னும் இருக்குங்க.. அப்புறம் சொல்றேன்..
4
சூர்யா -- சரவணனாக படித்து முடித்தது சென்னை லயோலா கல்லூரியில்.அந்தக் கல்லூரி சும்மா படி,படின்னு மட்டும் சொல்லாம பசங்களோட பிறதுறை ஆர்வத்தை வளர்க்கும் விதமாகவும் செயல்படும்.
அந்த ஆர்வமே அவருக்கு ஆப்பு வைக்கும் அளவுக்கு போய்டுச்சு... சரவணனோட விஸ்காம் துறையைச் சேர்ந்த நண்பன் ”இளமையில் போதை மருந்துக்கு அடிமையாவதைப்” பற்றிய கருவுடன் ஒரு நாடகம் போடுவதென முடிவெடுத்து களமிறங்க ,உடன் சூர்யாவும்.
நாடகம் போட காசு வேணுமே என்ன செய்யுறது ?? கன நேரத்தில் தோன்றியது யோசனை.. ஆங்கிலப் புத்தாண்டு துவங்கும் மாலை தொடங்கி நள்ளிரவு வரை “நியூ இயர் பார்ட்டி” நடத்தி அதில் வாரும் பணத்தை உபயோகித்துக் கொள்ளலாம்னு திட்டம்.. “ஜோடிகளுக்கு மட்டும்”ன்னு அச்சடிச்சு டிக்கெட்டும் விற்க்கப்பட்டது...டிசம்பர்31-மாலை 5 மணியளவிலேயே ஜோடிகள் வரத்துவங்கின..
அங்கதான் ஆப்பு நம்பர் 1 வைக்கப்பட்டது
ஹோட்டல்காரர்கள் கூட்டத்தப் பாத்தா விடுவாங்களா??? அதுவும் இளவயசுப் பசங்க.. “தெறடா பார்”அன்னு “பார்” திறக்கப் பட்டது.. “பார்” போற்றும் போதை ஒழிப்பு நாடகத்துக்கு பணம் சேர்க்க வந்த கூட்டத்திடம் “பார்” நடத்தி காசு பார்த்து கொண்டிருந்தார்கள்... அமைப்பாளர்கள் எவ்ளோ சொல்லியும் கேக்கவில்லை ஹோட்டல் நிர்வாகம்..
அப்டியே ரைட் கட் பண்ணா ஆப்பு நம்பர் 2
“ஜோடியாக மட்டும்”னு போட்ட இந்த பார்ட்டிக்கு ஒருவர் தனியாக வந்துவிட.. ஹோட்டல் நிர்வாகம் அவரை உள்ளேவிட மறுத்துவிட்டது.. அவர் கர்ஜித்துவிட்டு சென்றுவிட...
சிறிது நேரத்தில் போலிஸுடன் அதே விரட்டப்பட்ட இளைஞன் (அரசியல் பலம் உள்ள பிள்ளை!!)
‘பார்ட்டி” யை நடத்த லைசென்ஸ் இருக்கான்னு போலீஸ் கேட்க ..
இவர்கள் விழிக்க..
ஹோட்டல்காரகள் விலக..
”தண்ணி பார்ட்டி போலயே”ன்னு மேலும் பிடியை இறுக்க...
இவர்கள் நடுங்க...
அமைப்பாளார்கள் குழு 15 பேர் கைது.. சூர்யாவும் அடக்கம்.. க்ரீம்ஸ் சாலை காவல் நிலையத்தில் அடுத்த ஸீன்..
“நீங்க எல்லாரும் கள்ளச் சாராயம் வித்ததுக்காக உள்ள போகப் போறீங்கப்பா!!”ன்னு சொன்னபடியே ரைட்டர் பேர் விலாசம் எழுதிக் கேட்டார்..ஹையோ என்ன கொடுமை இது ?? இது திட்டமிட்ட சதிவலை.. என்ன பண்றது... எல்லோரும் திகைத்தப்படி எழுதிக்குடுக்க
சூர்யாவின் சுற்று வரும் போது அப்பா பெயர் “பழனிச்சாமி”என்று சொன்னார்.. ஃப்ரெண்ட்ஸ் எப்டீங்க சும்மா இருப்பாங்க??? “சார் அவங்க அப்பா சினிமா நடிகர் சிவகுமார் ... “ ன்னு அவங்க கடமையை செவ்வனே செஞ்சுட்டாங்க...சூர்யாவுக்கோ பயம் வூடுகட்டி உறுமி அடித்தது...
"ஸார் நான் சிவகுமார் பையந்தான் ஒத்துக்குறேன்.. வீட்டுக்கு தெரியவேணாம்”ன்னு கெஞ்ச..
“நீ சிவக்குமார் பையனான்றதே டவுட்ட இருக்கே.. இப்பிடி இருக்க “ன்னு ரைட்டர் கேட்க..
“அடப்பாவி பீர் அடி உடம்ப தேத்துடான்னா... இப்போ பாரு ரைட்டர் மண்ட காய யோசிக்கிறாரு”ன்னு அந்த நேரத்துலயும் கலாய்ச்சுறுக்காங்க.. (நண்பண்டா!!!)
ஒருவழியாக அவரும் சமாதானமாகிவிட.. அடுத்து வந்த ஐ.பி.ஸ் அதிகாரி கண்டிப்பா கோர்ட்ல அபராதத் தொகய கட்டுங்கடான்னு சொல்ல..கட்டிட்டு எஸ்கேப்...
ஒருத்தனுக்கு எந்த “ நல்ல பழக்கமும் “ இல்லன்னா “ஞானப்பழம்” லிஸ்ட்லதான் வெப்பாய்ங்க காலேஜ்ல.. அப்படி ஒரு ஞானப்பழமான சூர்யா வாழ்க்கைல இந்த ஸீன் ஒரு டெரர் ஸீன்தான்..
5
சூர்யா ‘நந்தா’ ஷூட்டிங்க்ல இருந்த நேரம். டைரக்டர் பாலா இவரை அணுஅணுவாக மாற்றிக் கொண்டிருந்தார். ‘திமிரா நட.. மொறப்பா பாரு’ன்னு வேற ஆளா மாத்திட்டு இருந்தார். படமும் முடிந்தது.. ஜோவுக்கு சும்மா எஸ்.எம்.எஸ் அனுப்பவதோடு சரி அந்தக் காலகட்டத்தில். சண்டையெல்லாம் மறந்து போச்சுடோய்...
நந்தா முடித்துவிட்டு அடுத்து என்ன செய்வதெனக் கவலை... என்ன மாதிரி படம் செய்யலாம்னு ஒரு குழப்பம்... அப்போ ஜோதிகா கிட்ட இருந்து ஃபோன்
ஜோ :- ஹாய் சூர்யா
சூர் : - சொல்லுங்க...
ஜோ:- கௌதம் ஒரு கதை வெச்சு இருக்காரு... நான் நடிக்கிறேன்.. ஹீரோ செட் ஆகல..நீங்க கதை கேட்டுட்டு சொல்லுங்க
சூர் :- ஓ.கே. :-)
கதை கேட்டு இவருக்கு பிடிச்சா.. தயாரிப்பாளர் கிடைக்கவில்லை... சூர்யாவ வெச்சு இவ்ளோ பெரிய பட்ஜெட்ல முடியாதுன்னு சொல்லிட்டாங்க... தாணு தயாரிக்க... படம் வளர வளர... இந்தக் காதல் ஜோடியின் காதலும் வளர்ந்தது...
படசெலவு கைமீறிப் போக .. கடைசில கௌதம்,சூர்யா,ஜோ எல்லாரும் கொஞ்சம் கைக்காசப் போட்டு முடுச்சாங்க... படமும் வெற்றி..
சூர்யா அணுஅணுவாக ஜோவை கவனிக்க ஆரம்பிச்சது இந்தக் காலகட்டத்தில்தான்...
அம்மாவும், தங்கையும் சில சொந்தங்களை மட்டும் பார்த்து வளர்ந்த மொக்கை சூர்யாவுக்கு... வரப்போற மனைவியும் இவங்க வரிசைல இருக்கணும்னு ஒரு எண்ணம்...
ஷூட்டிங் ஸ்பாட்ல ..
சூர் :- ஏன் இவ்ளோ அவசர அவசரமா சாப்புட்றீங்க???
ஜோ :- இல்ல .. ப்ரேக் முடியறதுக்குள்ள அசிஸ்டெண்ட்ஸும் சாப்டனுமே..
சூர்யா மெதுவாக சாப்பிடுவார்.. ஒரு நாள் கூட தன் உதவியாளர்களை இப்பிடி கேட்டது கூட இல்லை.. சரி இவங்கள விடுங்க.. அம்மாவக் கூட கேட்டதில்லையேன்னு நெனக்கும் போது , அவமானமா இருந்ததாம்....
இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களில் சூர்யாவின் மனசுக்குள் புகுந்தார் ஜோ.. ஆனா அவர் காட்டிக்கல.. பல நூறு முறை விலகிப் போனாலும் .. புகுந்து புறப்பட்டது காதல்..
எல்லா விஷயங்களிலும் தமிழ் கலாச்சாரம் கலந்து இருக்கும் ஒரு வீட்டில்.. மொழி தெரியாத,வேறு கலாச்சாரத்தில் பிறந்த , சம்பந்தமே இல்லாத சப்பாத்தி பொண்ணு எப்பிடி சேர்ந்தார்..???
வீட்டை சூர்யா எப்பிடி அனுகினார்??? எல்லாக் காதலிலுமே , அவர்கள் காதலின் ஆழத்தை , ஆழம் பார்ப்பது எதிர்ப்பு வரும் காலம்
################
Saturday, July 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment