Friday, May 14, 2010

கல்வி நிதி உதவிக்கு தொடர்பு கொள்ளுங்கள் : நடிகர் சூர்யா அறிவிப்பு


எல்லாம் தருகிற இந்த சமூகத்திற்கு ஏதாவது தர வேண்டும் என்ற நோக்கத்துடன் நடிகர் சூர்யா துவக்கியதுதான் அகரம் பவுண்டேசன்.


இந்த அகரம் பவுண்டேசன் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு கல்வி நலப்பணிகளை செய்து வருகிறார். அகரம் பவுண்டேசன் மூலம் நிதி உதவி பெற்று ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.


இன்று ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில், கல்வி நிதி பெற்று மேலும் கல்வியில் மேம்பட உதவ முன்வந்துள்ளார் சூர்யா.


அவர், தனது அகரம் பவுண்டேசன் மூலம் கல்வி நிதி உதவி பெறுவோர் தொடர்புகொள்ளவும்

:98410-91000 என்று அறிவித்துள்ளார்

No comments:

Post a Comment